விக்கித்தரவு:சொற்பொருளித் தரவு/வளர்ச்சி

From Wikidata
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Wikidata:Lexicographical data/Development and the translation is 100% complete.

இச்சொற்பொருளித்தரவுத் திட்டமானது, விக்கித்தரவுத் தளத்தின் ஒரு பகுதியாகும். இதன் தொழினுட்பக் கூறுகள் (Extension:WikibaseLexeme, APIs, interface…), விக்கிமீடியச்செருமானிய மென்பொருள் துறையால் வளர்த்தெடுக்கப் படுகின்றன. மேலும், சில தன்னார்வ கணிய நிரலர்களும், இம்மென்பொருள் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். இப்பக்கத்தில், திட்டப்பங்கேற்பாளர் குறித்தும், அவர்களின் பொறுப்புகளையும் அறியலாம், அவ்வறிதலால், இத்திட்டத் தனித்துவங்கள் வளர்ச்சி கொள்வது குறித்த பின்னூட்டங்கள் அளிக்க இயலும்.

பணியாட்கள்

இச்சமூகங்களின் இடையே தொடர்பாடல்

Léa Lacroix

'லியா' (Lea Lacroix (WMDE)) எனும் பெண்மணி விக்கித்தரவின் சமூகங்களின் இடையே நிகழும் தொடர்பாடல்களை, அக்கறையுடன் கையாள்கிறார். இதன் தொகுப்பாளர்களுக்கும், இந்நிரலர்களுக்கும் இடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவர். இவரே இத்திட்டத்திற்குத் தொடர்புடைய, அனைத்து விக்கிமீடியத் தொகுப்பாளர்களுக்கும்(விக்சனரி) தொடர்பாளர் ஆவார். இவர் கட்டக மேலாளர்(the product manager), இப்பொறியியல் மேலாளர்(the engineering manager), நிரலர்கள் (the developers) ஆகியவர்களுடன் நெருங்கி, ஒன்றிணைந்து செயற்படுவார்.

'லியா'(Léa) எனும் பெண்மணியிடம், இத்திட்டம் குறித்த வளர்ச்சி, தொடர்புடைய விக்கிச்சமூகங்கள் குறித்த வினாக்களையும், கேட்டறிய தயங்காமல் அணுகலாம். மேலும், இத்திட்ட வளர்ச்சிக்கான, உங்களது எண்ணங்களையும், தேவைகளையும், நெறிமுறைகளையும் தெரியப்படுத்தலாம்.

முகவரி:

கட்டக மேலாளர்

Lydia Pintscher

'லைடியா' (Lydia Pintscher (WMDE)) எனும் பெண்மணி, விக்கித்தரவின் கட்டக மேலாளர் ஆவார். விக்கித்தரவின் வேறுபட்டத் திட்ட வளர்ச்சிகளுக்கும், இச்சொற்பொருளித்தரவுத் திட்ட வளர்ச்சிக்கும் பொறுப்பானவர் ஆவார். எனவே, இவர் ஒட்டு மொத்த விக்கித்தரவுக்கான தொழினுட்பக் கண்ணோட்டங்களையும், விக்கித்தரவு இலக்குகளையும், அவற்றிற்கான உத்திகளையும் கையாள்கிறார். விக்கித்தரவின் கணிய நிரல் கட்டகத்திற்குத் தரவேண்டிய முன்னுரிமைகளை, இவரே முடிவெடுக்கிறார். இதற்காக 'லியா'(Léa) உடனும் இணைந்து, இச்சமூகத்தாரின் தேவைகளை அறிகிறார்.

'லைடியா'(Lydia) எனும் பெண்மணியிடம், இத்திட்டம் குறித்த இலக்கு அல்லது வரையறை குறித்த வினாக்களையும், எண்ணங்களையும் வினவலாம்.

முகவரி:

கணிய நிரலர்கள்

செருமானிய விக்கிமீடியாவின் மென்பொருள் துறையானது, பல விக்கி நிரலர்களை, விக்கித்தரவுத் திட்டங்களுக்கும், சொற்பொருளன் திட்டத்திற்கும், விக்கிமீடியாவின் மென்பொருளான மீடியாவிக்கி உள்கட்டகங்களுக்கும், செருமானிய விக்கிமீடியாவுக்கான தொழினுட்பத் தேவைகளுக்கும் பணியமர்த்துகிறது. இந்த விக்கிநிரலர்கள், விக்கிமீடியச் சூழ்நிலைகளுக்கும், திட்டத்தேவைகளுக்கும் ஏற்ப, ஒரு திட்டத்தில் இருந்து மற்றொரு திட்டத்திற்கு மாறியும் செயற்படுவர்.

இந்த விக்கிநிரலர்கள், எடுத்துக்கொண்ட திட்டத்திற்கு ஒப்ப, நிலையாகவும், பாதுகாப்புடனும், தொடர்ந்து இலக்குகளை நிலைநிறுத்தவும் செயற்படுவர்.

இந்த நிரலர்களுக்கு நேரமும், கருத்தொற்றுமை உள்ள அமைதியான சூழலும் பணிபுரிய தேவைப்டுகிறது. எனவே, தற்போதுள்ள திட்டநிரலில் ஏதேனும் வழு அல்லது இடர் இருப்பின், அதுகுறித்து மீடியாவிக்கிக் கட்டகத் தளத்தில் (The Phabricator) பதியலாம். இருப்பினும், 'லியா'(Léa) எனும் மேலாளரைத் தொடர்பு கொள்வதே சிறப்பு ஆகும்.

பயனர் அனுபவம்

செருமானிய விக்கிமீடிய மென்பொருள் துறையில் பயனர் குறித்த ஆய்வுகளும், பயனர் பட்டறிவுகளும், பயனர் இடைமுக முன்மாதிரிகளும், ஒரு குழுவால் (UX team) கணிக்கப்படுகின்றன. அக்குழுவினர், தொகுப்பாளர்களின் பின்னூட்டங்களையும், தொகுப்பாளரின் செயற்பாடு குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம்.

தன்னார்வலர்

விக்கித்தொகுப்பாளரும், தன்னார்வலரும் இவ்வளர்ச்சியில் பங்கு கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஏற்கனவே உள்ள விக்கிநிரல் கட்டகத்தின் மேலே செயற்படவல்ல கணிய நிரல்களையும், கருவிகளையும் அமைக்கலாம். இத்திட்ட நிரல் தொகுப்புக்குத் தேவையான, நிரல்சீரமைப்புகளையும்(patches) அளிக்கலாம். இத்தகையோர், செருமானிய விக்கிமீடிய மென்பொருள் துறையினர் அல்ல என அறிவிக்கப்படுகின்றனர்.

சொற்பொருளித்தரவுக் கருவிகளை மேம்படுத்துபவர் வருமாறு;-

  • Tpt என்பவர் 'இயந்திரங்கள் இலகுவாகப் புரிந்து கையாளக்கூடிய, சொற்பொருளித்தரவு வடிவங்களை' (RDF mapping for lexicographical data) மேம்படுத்துவதில் முனைந்துள்ளார்.
  • ...(உங்கள் பெயரை இங்கிணைக்க முயலுங்கள்)

குறிப்பு: சொற்பொருளன் இயல்புகளின் முன்மொழிவுப் பக்கத்தில், உள்ளடக்கங்களின் கூட்டிணைவையும், இருக்க வேண்டிய தலைப்புக் கூறுகளையும், ஒட்டுமொத்த சமூகத்தாரும் கட்டகவடிவம் செய்கின்றனர். இவ்வடிவ இலக்கில், கணியநிரலர்கள் மட்டுமே பங்களிப்பதில்லை. இது குறித்த உங்களின் எண்ணங்களை, விக்கித்தரவின் சொற்பொருளித்தரவின் பேச்சுப்பக்கத்தில் (Wikidata talk:Lexicographical data) தெரிவிக்கத் தயங்காதீர்கள்.

வளர்ச்சித் திட்டம்

மீடியாவிக்கிக் கட்டகத் (Phabricator) தளத்திலே, இந்நிரலாக்கத்திற்குரிய பெரும்பான்மையான உரையாடல்களும், முடிவெடுப்புகளும் நிகழ்கின்றன. இக்கட்டகத்தின் சொற்பொருளித்தரவு மன்றக்குழுவின் (Lexicographical Data Board) வளர்ச்சித் திட்டத்தில், தற்போது நடைபெறும் நிரலாக்கங்களையும், சிறப்புக்கூறுகளையும், அடுத்த வரவிருக்கும் பதிப்புகளைக் குறித்தும் ஒட்டுமொத்த கண்ணோடங்களை அறிந்து கொள்ளலாம்.

இதன் முதல் வெளியீடு, மே மாதம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதுமுதல் இத்திட்டமானது தொடர்ந்து வளர்த்தெடுக்கப் படுகிறது.

தற்போதுள்ள புதிப்பின் வழுக்களைக் களைய, புதிய இலக்குகளைப் பதியுங்கள் அல்லது நிகழும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பதியுங்கள். உங்களுக்கு மீடியாவிக்கிக் கட்டகத் தளத்தில் (Phabricator) பதிவது வசதியாக இல்லையெனில், பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது 'லியாவிடம்' (Lea Lacroix (WMDE)), தொழினுட்ப தேவைகளைத் தெரிவிக்கலாம்.

மிக முக்கியமான உரையாடல்களும், அறிவிப்புகளும், இப்பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கப்படும். புதிய செய்திககளைப் பெற, அப்பக்கத்தினை கவனிப்புப்பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள். இத்திட்டம் குறித்த, எந்த உரையாடலைத் தொடங்குவதற்கும், இப்பக்கமே முதன்மையானதாகும்.

முந்தைய வளர்ச்சித் திட்டங்கள்

Start date Primary author(s)
2013-02 JAn Dudík
This, that and the other
Darkdadaah
2013-06 Denny
(Denny Vrandečić (WMDE))
2013-07 Micru
Francis Tyers
2013-08 Denny
2013-09 Ivadon
2013-10 Bigbossfarin
2014-10 GPHemsley
2015-05 Denny